கொரோனா தொற்றில் இருந்து மேலும் 939 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 53 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 79 ஆயிரத்து 59 ஆக பதிவாகியுள்ளது.
அதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 611ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.