வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் சந்தித்து பேசியிருந்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், வெளிவிவகார அமைச்சர் தினேஷ்குணவர்தனவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
கொரோனாவினை எதிர்த்துப் போராடுவதற்கும், எம்.வி.எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொருளாதாரத் தாக்கத்தைத் தணிப்பதற்கும் வழங்கப்பட்ட உதவிகளுக்கு வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஊடாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஒக்சிமீட்டர்கள் போன்ற அவசர மருத்துவப் பொருட்களையும், கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளையும் அனுப்பியமைக்காக அவர் குறிப்பாக அமெரிக்க அசாங்கத்தைப் பாராட்டினார்.
இதேவேளை, அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட உயர்மட்ட இராஜந்திரிகள் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நேற்று சந்தித்துள்ளனர்.
இதன் போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பரந்துப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.