பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக இதுவரை 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை என்றும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, லக்சம்பேர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தீர்க்கமான போருக்கு ஜேர்மன் அதிபர் அங்கலா மெர்கெல் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜேர்மனியில் பொலிஸார், இராணுவ வீரர்கள் மற்றும் அவசர நிலை பணியாளர்கள் என சுமார் 15,000 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பல கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன என்றும் மேற்கு ஜேர்மன் மாவட்டமான அக்விலரில் 1,300 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை ஜூலை 20 ஆம் திகதியை தேசிய துக்க நாளாக பிரகடனம் செய்து பெல்ஜியப் பிரதமர் அறிவித்துள்ளார்.