கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 962 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 55 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 82 ஆயிரத்து 60 ஆக பதிவாகியுள்ளது.
அதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 702 ஆக பதிவாகியுள்ளது.