இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 41 ஆயிரத்து 697 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 12 இலட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 3 கோடியே 4 இலட்சத்து 21 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து 4 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம் நேற்றைய தினம் 510 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளது.