யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால், கறுப்பு யூலையை நினைவு கூறும் வகையில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதனை பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) இரவோடு இரவாக கிழித்தெறிந்துள்ளனர்.
குறித்த செயற்பாடு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை நினைவு கூறுவதற்கு இலங்கை அரசு தடை போடுகின்றது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் நாட்டில், ஜனநாயகம் எங்கு உள்ளது எனவும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் இந்த செயற்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கூறியுள்ளது.