இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இந்தோனேஷியாவில் 30இலட்சத்து 33ஆயிரத்து 339பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் இந்தோனேஷியாவில் இதுவரை 79ஆயிரத்து 32பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 49ஆயிரத்து 509பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆயிரத்து 449பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 61ஆயிரத்து 384பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இதுவரை 23இலட்சத்து 92ஆயிரத்து 923பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.