ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), ஜம்முவுக்கு விஜயம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆராயவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நாளை, கார்கில் போர் வெற்றியின் 22ம் ஆண்டை முன்னிட்டு, தியாகங்கள் புரிந்த இந்திய படையினருக்கு, லடாக்கிலுள்ள கார்கில் போர் நினைவகத்தில், ராம்நாத் கோவிந் மரியாதை செலுத்துகிறார்.
அதன் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதி, ஸ்ரீநகரிலுள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19ஆவது வருட பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.