மாத இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு எல்லையைத் திறக்க, ஹீத்ரோ விமான நிலையம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இன்றுவரை கிட்டத்தட்ட 3 பில்லியன் பவுண்டுகள், கொரோனா வைரஸ் நெருக்கடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
விலையுயர்ந்த கொவிட் சோதனைத் தேவைகள், விமானப் பயணத்தை திறம்பட மீண்டும் திறப்பதில் தடையாக இருப்பதாக நிறுவனம் கூறியது.
அதே நேரத்தில் சர்வதேச வர்த்தகத்தில் ஐரோப்பிய ஒன்றிய போட்டியாளர்களுக்குப் பின்னால் பிரித்தானியா வீழ்ச்சியடைந்து வருவதாகவும், கட்டுப்பாடுகளை நீக்குவதில் மெதுவாக இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நான்கு மில்லியனுக்கும் குறைவான மக்கள் ஹீத்ரோ விமான நிலையம் ஊடாக பயணத்தினர்.