ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் சுமார் இரண்டரை மணி நேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது தேர்தல் முறையில் திருத்தம் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அரசியலமைப்பு திருத்தம் மற்றும் கட்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசியதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
















