கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,405 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 69 ஆயிரத்து 007 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 96 ஆயிரத்து 516 ஆக பதிவாகியுள்ளது.
அதில் 23,410 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்ற அதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,099 ஆக பதிவாகியுள்ளது.