காஷ்மீர் இளைஞர்கள் முதல் முறையாக கூடைப்பந்தாட்ட போட்டியினை ரசித்து விளையாடியுள்ளனர்.
அண்மையில் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற ஃப்ளட்லைட்களின் கீழ் விளையாடிய முதல் வகையான கூடைப்பந்தாட்ட போட்டியை காஷ்மீர் இளைஞர்கள் இதன்போது ரசித்து விளையாடியுள்ளனர்.
இத்தகைய போட்டிகளை நடத்துவது, விளையாட்டுகளை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள பல நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
மேலும் இத்தகைய பகுதிகளிலுள்ள திறமையான இளைஞர்களுக்கு அவர்களின் திறமையை வெளிப்படுத்தவும் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளைத் வழங்கும் தளத்தை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜம்மு மாநில விளையாட்டு சபையுடன் இணைந்து கூடைப்பந்தாட்ட கழகம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் குறித்த போட்டியின் அமைப்பாளர் முஜ்தாபா, “ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் இரவு நேரங்களில் நடைபெற்ற போட்டிகளால் நான் ஈர்க்கப்பட்டேன்.
நான் ஒரு கூடைப்பந்து வீரர் என்பதால், ஃப்ளட்லைட்களைப் பயன்படுத்த அதிகாரிகளிடம் கோரியிருந்தேன். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேலும் உள்ளூர் வீரர்கள் விளையாட்டின் சர்வதேச உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். கூடைப்பந்து விளையாட்டு, பள்ளத்தாக்கில் மிகவும் பிரபலமாக இல்லை.
எனினும் இந்த போட்டியின் ஊடாக அதிகமான மக்கள் அதில் ஈர்க்கப்படுவார்கள் என நான் நம்புகிறேன்.
அத்துடன் எல்லா வகையான விளையாட்டுகளும் இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து அவர்களை விலக்கி வைக்க இது உதவுகிறது.
குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட பல சூழ்நிலைகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளத்தாக்கிலுள்ள இளைஞர்கள் உட்பட மக்களிடையே காணப்பட்ட பொதுவான மன அழுத்தத்தைக் குறைக்க இது உதவுகிறது.
இதேவேளை கூடைப்பந்து பயிற்சியாளர் மிர் முர்சலீன் கூறியுள்ளதாவது, ‘ஒரு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில், நாங்கள் விளக்குகளின் கீழ் விளையாட வேண்டியிருந்தது.
ஆனால் மாநிலத்தில், யு.டி மட்டத்தில் நாங்கள் ஒருபோதும் விளக்குகளின் கீழ் விளையாடுவதை அனுபவித்ததில்லை. அதேபோல் சிக்கல்களை எதிர்கொண்டோம்.
விளையாட்டுக் குழுவின் முன்முயற்சி ஒரு நல்ல ஒன்றாகும். யு.டி.யில் விளையாட்டு உட்கட்டமைப்பு நாளுக்கு நாள் மேம்பட்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கூடைப்பந்து வீரர் மொஹமட் ஹாரிஸ் கூறுகையில், “இது மூத்த வீரர்கள் மற்றும் வரவிருக்கும் வீரர்கள் இருவருக்கும் ஒரு நல்ல முயற்சி.
இது யு.டி.யின் இளைஞர்களுக்கு சர்வதேச அளவிலான விளையாட்டுகளை வெளிப்படுத்த அனுமதிக்கும்.
மேலும் எங்களது திறமையை வெளிப்படுத்த சரியான தளம் கிடைக்கவில்லை. இந்த முயற்சியால், நாங்கள் அதனை பெறமுடியுமென நம்புகின்றோம்” என கூறியுள்ளார்.