வடக்கு கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் பதவிகளுக்கு பணியாற்ற விரும்பும் சிங்கள அதிகாரிகளிடம் இருந்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அதன்படி நிர்வாக சேவையில் உள்ளவர்கள் வடக்கு கிழக்கு பிரதேச செயலகத்தில் பணியாற்ற விரும்பினால் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் இன விகிதாசாரத்தை குறைக்கும் வகையிலும் சிங்கள குடியேற்றங்களை அதிகரிக்கும் வகையிலும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையிலேயே தெற்கில் உள்ள சிங்கள அதிகாரிகளை தமிழர் பகுதிகளில் நியமிக்கும் வகையில் இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஏற்கனவே வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துலசேன என்ற சிங்கள அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் பதவியிலும் சிங்களவர் ஒருவரை நியமிக்கப்படலாம் என்ற சர்ச்சையும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் வடக்கு கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் பதவிகளுக்கு சிங்களவர்களை நியமிக்கவும் இரகசிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.