ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 17ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றது.
இதனையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணியாற்றுவதற்கு தயாராகுமாறு அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரிடம் பிரதமர் கூறியுள்ளார்.
இந்த நிலையிலேயே, இணையவழி கற்பித்தல் முறையில் இருந்து விலகி தாம் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை வரை தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.