கியூப தூதரகத்திற்கு சேதம் விளைவித்த பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை இடம்பெற்று வருவதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை அல்லது பொறுப்பேற்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை இரவு தூதரகத்தில் இரண்டு பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாரிஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும்மூன்று மோலோடோவ் கொக்டெய்ல்கள் வீசப்பட்டதாக கியூபா வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என கியூபா வெளிவிவகார அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.