நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சோபித தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக நாடாளுமன்றில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும் .
மேலும் இதேபோன்ற சம்பவங்கள் தொடர்பாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு, பொலிஸார் மற்றும் அதிகாரிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள், கொலைகாரர்கள் மற்றும் திருடர்கள் போன்ற குற்றவாளிகள் நாடாளுமன்றத்தை தங்கள் அதிகார இடமாக மாற்றியுள்ளனர்
அத்தோடு ரிஷாட் பதியுதீன் போன்றவர்களுக்காக நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் வெட்கப்பட வேண்டும்.
இதேவேளை ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணத்தை மறைக்க சதித்திட்டம் இடம்பெறுவதாக சிங்களே அமைப்பின் மெடில்லே பஞ்சாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுமியின் மரணம் குறித்த முதல் பிரேத பரிசோதனையில் வசீம் தாஜுதீனின் பிரேத பரிசோதனைக்கு விசுவாசமாக இருந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.