இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணம்- வடமராட்சி வடக்கு கிராம அலுவலர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் நேற்று மாத்திரம் 2,455 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 306,657 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து 275,212பேர் பூரணமாக இதுவரை குணமடைந்துள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,380 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.