பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்தில் எந்தவொரு குறுக்கீடும் இல்லாத வகையில் கடுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
தேவையான சட்ட விதிகளை அமுல்படுத்துவதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை வலுப்படுத்துவது அரசாங்கம் உட்பட அனைவரினதும் பொறுப்பாகும்.
பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் நோக்கமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.