நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து, தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி ஹற்றன் நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சமூக நல்வழி மன்றத்தின் ஏற்பாட்டில் ஹற்றன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், பெண்கள் உரிமையை பாதுகாப்போம், சட்டத்தை நசுக்காதே, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்போம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.