வல்வைப் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வல்வையில் வைத்து 1989ம் ஆண்டு இதே நாளில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்களும் இதன்போது நினைவு கூரப்பட்டனர்.
கடந்த 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி, வல்வெட்டித்துறையில் புலிகளுக்கும் இந்திய ஆக்கிரமிப்பு படைக்கும் நடந்த மோதலில் 9 இந்திய இராணுவம் உயிரிழந்தமைக்காக 2ம், 3ம், 4ம் திகதிகளில், இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 63 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட மக்கள் பெரும் காயங்களுக்கு உள்ளாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.