இலங்கையில் நேற்று 4 இலட்சத்து 22 ஆயிரத்து 472 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
22,981 பேருக்கு அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதாகவும், 174,985 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 203,515 பேருக்கு முதல் சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதுடன் 18,483 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், 12 பேருக்கு பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸும் ஆறு பேருக்கு இரண்டாவது டோஸும் வழங்கப்பட்டது.
மேலும் 2,490 பேருக்கு முதல் மொடர்னா தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் தடுப்பூசி நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இதுவரை 2,448,361 பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.