நாட்டில் கடந்த 3 தினங்களில் மாத்திரம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 3 இலட்சத்து 70 ஆயிரத்து 761 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 664 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 7 இலட்சத்து 56 ஆயிரத்து 646 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இதுவரையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறாதோர், உடனடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று அதனை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் நாட்டில் ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 766 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸும் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 9 ஆயிரத்து 220 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், நேற்றைய தினம் ஆயிரத்து 155 பேருக்கு மொடர்னா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.