நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது.
முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியைப் பேணாமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.