இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுடன் மருத்துவமனையில் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர், 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் புதிய தலைமை நிர்வாகி அமண்டா பிரிட்சார்ட் தெரிவித்துள்ளார்.
சுமார் 1,000 இளைஞர்கள் தற்போது மருத்துவமனையில் உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
தடுப்பூசி போட மக்கள் முன்வந்தது மிகவும் முக்கியமானது எனவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர்களின் அளவு கடந்த குளிர்காலத்தில் உச்சத்தை விட நான்கு மடங்கு அதிகம் எனவும் அவர் கூறினார்.
குளிர்கால எழுச்சியின் போது மருத்துவமனையில் இருந்தவர்களில் சுமார் 5.5 சதவீதம் பேர் இளைஞர்கள் ஆவார்.
தேசிய சுகாதார சேவை வட்டாரங்கள் மருத்துவமனை சேர்க்கை பற்றிய சமீபத்திய புள்ளிவிபரங்கள் வயதானவர்களைப் பாதுகாப்பதில் தடுப்பூசி திட்டத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கின்றன.
பிரிட்சார்ட் மேலும் கூறுகையில், ‘தடுப்பூசி திட்டம் மக்களை பாதுகாப்பதில், மருத்துவமனை தேவைப்படுவதை நிறுத்தி, பாதுகாப்பாக வைப்பதில் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை இது காட்டுகிறது.
தடுப்பூசி செலுத்தாத இளைஞர்கள் கடுமையாக நோய்வாய்ப்படலாம். அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் அல்ல, அவர்கள் தங்களை முற்றிலும் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி தடுப்பூசியை எடுத்துக்கொள்வதுதான்’ என கூறினார்.