கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டை கண்டித்தும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தன.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து அரசடி சந்தி வரையில் கண்டன பேரணி முன்னெடுக்கப்பட்டு மீண்டும் கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம் வரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்வியை இராணுவமயப்படுத்தும் கொத்தலாவல சட்டத்தினை முறியடிப்போம், கொத்தலாவல பாதுகாப்பு சட்ட மூலத்தினை அமுல்படுத்தாதே, கல்வியை இராணுவமயப்படுத்தாதே, இராணுவ-சந்தை கல்வியை நிறுத்து போன்ற கோசங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.