கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 841 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 86 ஆயிரத்து 365 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 18 ஆயிரத்து 775 ஆக பதிவாகியுள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 727 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.