வதந்திகள் காரணமாக கொழும்பில் 60 வயதுக்கு மேற்பட்ட 40,000 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் காரணமாக இவர்கள் தடுப்பூசி போடுவதைத் தவிர்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனை குறிப்பிட்டார்.
ஒருவகை தடுப்பூசி மற்றொன்றை விட சிறந்தது அல்லது ஒரு குறிப்பிட்ட பிராண்ட் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்பர்களுக்கு சிறந்தது போன்ற வதந்திகள் காரணமாக பலர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மறுப்பதாக கூறினார்.
கிடைக்கக்கூடிய அனைத்து தடுப்பூசிகளும் பயனுள்ளதாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், எவ்வாறாயினும் உயிரிழப்புகளைத் தடுக்க, கிடைக்கக்கூடிய தடுப்பூசியை மக்கள் தாமதமின்றி பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.