ஸ்கொட்லாந்து அதன் மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. ஆனால் மக்கள் பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முககவசங்களை அணிய வேண்டும்.
நாடு இன்று (திங்கட்கிழமை) முதல் நிலை பூஜ்ஜியத்துக்கு நகர்ந்துள்ளது. அதாவது உடல் ரீதியான தூரத்திற்கான அனைத்து சட்டத் தேவைகளும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர இரவு விடுதிகள் உட்பட அனைத்து இடங்களும் மீண்டும் திறக்கப்படலாம்.
பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கிய போதிலும், ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள விதிகள் இங்கிலாந்தை விட இன்னும் கடுமையாகவே உள்ளன. இரு நாடுகளும் சில இடங்களில் தொடர்ந்து முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகின்றன.
ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், தொற்றுகளின் நிலையான சரிவு மற்றும் தடுப்பூசியின் வெற்றி காரணமாக நாடு அதன் ஐந்து அடுக்கு விதிகளின் மிகக் குறைந்த நிலைக்கு செல்ல முடியும் என்று கூறினார்.
தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் செலுத்திய பெரியவர்கள் மற்றும் குழந்தைகளும் இப்போது அறிகுறி இல்லாத மற்றும் எதிர்மறை பிசிஆர் சோதனையை வழங்கும் வரை, கொரோனா வைரஸ் உள்ள ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தால், சுய தனிமைப்படுத்தலைத் தவிர்க்க முடியும்.
பாடசாலைகளுக்கு திரும்பிய ஆறு வாரங்கள் வரை அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும். ஆனால் யாராவது நேர்மறை சோதனை செய்தால் முழு வகுப்புகளும் இனி வீட்டில் இருக்க வேண்டியதில்லை.
இருப்பினும், அதிக ஆபத்துள்ள நெருங்கிய தொடர்புகள் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இன்னும் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
புதிய விதிகளின்படி, 5,000க்கும் மேற்பட்ட நபர்களின் மதுக்கடைகள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளில் மக்கள் குடிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
உள்ளூர் அதிகாரிகளிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் அனுமதி பெற்றிருக்கும் வரை, 2,000க்கும் மேற்பட்டவர்களின் உட்புற நிகழ்வுகள் தொடர முடியும்.