தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கல்வி செயற்பாடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ இந்தியா முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளன.
அதன்படி தமிழகத்தில் மதுரை, நாகை, சேலம், அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் இந்த பட்டியலில் உள்ளன.
அதேபோன்று மத்தியப் பிரதேசத்தில் 39 மாவட்டங்களும் உத்தரப் பிரதேசத்தில் 41 மாவட்டங்களும் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மத்திய உயர்கல்வித்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே இந்த பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றுவதற்கு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.