மேகாலயாவில் லேசான நிலநடுக்கம், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உணரப்பட்டது.
மேகாலயா மாநிலம்- நொங்போ பகுதிக்கு வட கிழக்கே 33 கிலோ மீற்றர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்ததொரு விபரங்களும் இதுவரை கிடைக்கவில்லையென தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.