கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருகின்றமையினால் இந்திய விமானங்களுக்கான தடையை கனடா மேலும் நீடித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி வரை இந்திய விமானங்களுக்கான தடையை நீடித்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இதேபோன்று இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.
இதேவேளை அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பின்னர் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பிரான்ஸும் இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.