சீனாவின் கன்சு மாகாணத்திலுள்ள ஒரு மடத்தை வலுக்கட்டாயமாக மூடியதற்காக பெய்ஜிங் அரசாங்கத்துக்கு எதிராக ஹாங்செங் மடத்தைச் சேர்ந்த துறவிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
கன்சு அதிகாரிகள், லிங்க்சியா ஹுய் தன்னாட்சி பிராந்தியத்திலுள்ள திபெத்திய மடத்தை வலுக்கட்டாயமாக மூடி, துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளை வெளியேற்றியுள்ளார்கள்.
இதன்போது அவர்களில் பலர், அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டதாக ரேடியோ ஃப்ரீ ஆசியா, அமெரிக்காவைச் சேர்ந்த வர்ணனையாளரான மா ஜுவை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த சம்பவத்தின் காணொளிகளில் ‘துறவிகளை வலுக்கட்டாயமாக நீக்குவது சட்டவிரோதமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று எழுதப்பட்ட பதாகைகளை பிக்குகள் வைத்திருப்பதை பார்க்க கூடியதாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கிடையில் ‘சீனாவின் ஹான் சீனப் பகுதியில் உள்ள அனைத்து திபெத்திய கோவில்கள் மற்றும் மடங்களை அகற்ற அதிகாரிகள் தயாராக உள்ளனர்’ என்று மா ஜு தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலின்போது நன்கொடைகள் அதிகரித்ததால், உள்ளூர் அதிகாரிகள் மடத்தின் செல்வத்தில் ஆர்வம் காட்டலாம் என ரேடியோ ஃப்ரீ ஆசியா, ஆன்லைன் கருத்துகளை மேற்கோள் காட்டி அறிவித்தது.
சமீபத்திய வளர்ச்சியில் திபெத்திய புத்தமதம், ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். பாரம்பரிய மடாலயக் கல்வியை வழங்க மடங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன திபெத்திய புத்த மதத்தின் மீது கட்டுப்பாட்டை அதிகரிக்க சீன அதிகாரிகள் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள்,வழக்கமான ‘தேசபக்தி கல்வி மற்றும் திபெத்திய புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரான பிற அரசியல் பிரசாரங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெய்ஜிங் அரசாங்கத்தின் நலனுக்கு சேவை செய்ய துறவிகள் ஈர்க்கப்பட்டு, சி.சி.பியின் கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள துறவு நிறுவனங்கள், Buddhist கல்வியை அரசியல் போதனையாக மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
சி.சி.பியின் அதிகாரிகள், மடங்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளை நிர்வகிப்பது மற்றும் நடத்துவது குறித்து நேரடி மேற்பார்வையுடன் கூடிய அதிகாரம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.