இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 18 இலட்சத்தை கடந்துள்ளது.
இவர்களில் 3 கோடியே 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 4 இலட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 464 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது.