சீனாவில் கைது செய்யப்பட்ட திபெத்தியர் ஒருவர் 20 வருடகால சிறைத்தண்டைனையை நிறைவு செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
‘பிரிவினைவாதம்’ குற்றச்சாட்டில் பெய்ஜிங்கால் தடுத்து வைக்கப்பட்டிருந்த திபெத்திய ஆசிரியர் ஒருவரே, தனது 20 வருட சிறை தண்டனையை நிறைவு செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது திபெத்திய மத ஆசிரியரான பங்ரி ரின்போசேவுக்கு செப்டம்பர் 26 ஆம் திகதி 2000ஆம் ஆண்டு,ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அவருடைய தண்டனைக் காலம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. ஆனால் அவரது விடுதலை குறித்து எந்தொரு தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான திபெத்திய மையத்தை மேற்கோள் காட்டி ரேடியோ ஃப்ரீ ஆசியா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
‘பாங்ரி ரின்போச் தனது வாழ்க்கையின் 22 ஆண்டுகளை சிறையில் கழித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் சிறைவாசத்தை முடித்திருந்தாலும்அவர் விடுவிக்கப்பட்டாரா இல்லையா அல்லது அவரது தற்போதைய உடல்நிலை பற்றி எதுவும் தெரியாது’ என்று TCHRD ஆராய்ச்சியாளர் டென்சின் தாவா கூறியுள்ளார்.
இந்த நிலைமை உரிமை குழுக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திபெத்திய கைதிகள் சீன சிறைகளுக்குள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ரின்போச்சியின் இருப்பிடத்தை தெளிவுபடுத்துமாறு திபெத்திய உரிமைக் குழு பெய்ஜிங்கை வலியுறுத்தியுள்ளது.
நகரத்தின் முக்கிய சதுக்கத்தில் தடைசெய்யப்பட்ட திபெத்திய தேசியக் கொடியை உயர்த்த பாடசாலை ஊழியர், சதி செய்ததாகக் கூறி, ஆகஸ்ட் 1999 இல் பங்ரி ரின்போச் தனது மனைவி நைமா சோட்ரானுடன் கைது செய்யப்பட்டார் என ரேடியோ ஃப்ரீ ஆசியா தெரிவித்துள்ளது.
அவரது மனைவி 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார். பின்னர் பெப்ரவரி 2006 இல் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை இந்த மாத தொடக்கத்தில் மற்றொரு திபெத்திய அரசியல் கைதி லோப்சாங் ஜின்பா, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் திபெத்தில் உள்ள அடக்குமுறை நிலைமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 800 கிமீ தூரம் சைக்கிளில் பயணம் செய்தார்.
முன்னாள் அரசியல் கைதியாக இருக்கும் ஜின்பா, திபெத்தில் உள்ள காம் தாவுவில் 2008 ஆர்ப்பாட்டங்களை படமாக்கியதற்காக, சீன அரசால் இரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.