ரஷ்யாவில் இருந்து மேலுமொரு தொகுதி ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
அதன்படி, 15 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இன்று (புதன்கிழமை)) காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
முன்னதாக, ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படவிருந்த தடுப்பூசிகள் குறித்து நிச்சயமற்ற நிலை இருந்தது.
தேவையான தடுப்பூசிகள் கிடைக்காத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய ஏற்கனவே ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருவதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.
இதேநேரம், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் புள்ளிவிபரங்களின்படி, ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 81 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் 14 ஆயிரத்து 516 பேருக்கு மாத்திரமே ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.