இலங்கையில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 35 இலட்சத்தைக் கடந்துள்ளது.
அதன்படி, நாட்டில் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 35 இலட்சத்து 29 ஆயிரத்து 515 ஆக பதிவாகியுள்ளது.
இதில் சினோபார்ம் தடுப்பூசியை 26 இலட்சத்து 46 ஆயிரத்து 162 பேர் முழுமையாகப் பெற்றுள்ளனர்.
அதேபோல கொவிஸீல்ட் தடுப்பூசியை 8 இலட்சத்து 67 ஆயிரத்து 811 பேர் முழுமையாகப் பெற்றுள்ளனர்.
மேலும் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை 14 ஆயிரத்து 516 பேர் முழுமையாகப் பெற்றுள்ளனர்.
அதேபோல பைஸர் தடுப்பூசியை ஆயிரத்து 26 பேர் முழுமையாகப் பெற்றுள்ளனர்.
இதற்கமைய மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையில் 15 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என தொற்றுநோயியல் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இதேநேரம், முதலாவது தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 51 சதவீதமாக அதிகரித்துள்ளதென அந்தப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸை 90 இலட்சத்து 57 ஆயிரத்து 321 பேர் பெற்றுள்ளனர்.
அதேபோல கொவிஸீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸை 11 இலட்சத்து 83 ஆயிரத்து 71 பேர் பெற்றுள்ளனர்.
மேலும் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸை ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 81 பேர் பெற்றுள்ளனர்.
அதேபோல பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸை 2 இலட்சத்து 51 ஆயிரத்து 751 பேர் பெற்றுள்ளனர்.
மேலும் மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸை 7 இலட்சத்து 58 ஆயிரத்து 251 பேர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.