பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி எப் 10 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இதற்கான கவுண்டவுன் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈஓஎஸ் -03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப் -10 என்ற ரொக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.