அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள மெல்பேர்ன் நகரிலும் அமுலில் உள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை இம்மாதம் 19ஆம் திகதி முடிவுபெறும் என அம்மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை வேகமாக பரவும் டெல்டா வகைக் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
முடக்கநித்தை தளர்த்தினால், சிட்னி நகரைப் போல் கடுமையான அளவில் கொரோன தாக்கம் ஏற்படும் என விக்டோரியா மாநில முதலவர் டேனியல் ஆண்ட்ரூ கூறியுள்ளார்.
உலகின் பல நாடுகளை விட கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் சிறப்பாக செயற்பட்டுள்ள அவுஸ்ரேலியாவில் 944 இறப்புக்களும் 37,000 க்கும் குறைவான நோயாளிகளும் மாத்திரமே பதிவாகியுள்ளது.
ஆனால் நாட்டில் 25 விதத்திற்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவுஸ்ரேலியா கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.