நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இறுதி மூன்று நாட்களில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இறுதி தினம் எட்டியுள்ள நிலையில், இனி வரும் இரண்டு நாட்களில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
ஏற்கனவே பெகாஸஸ் உளவு விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. இது குறித்த விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருவதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதனால் சபை அமர்வுகள் அவ்வவ்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.