இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பெங்களூரில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
பெற்றோர்கள் முதலில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், தங்கள் குழந்தைகளை முறையாக கண்காணிப்பது மட்டுமல்லாமல் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்துவது, பாடசாலைகளை திறப்பதை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.