கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் அவர்களுக்கு தேவையான ஒட்சிசனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்தே ஒட்சிசனை இறக்குமதி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக 20 மெற்றிக் தொன் ஒட்சிசன் அடங்கிய 6 கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை நாட்டுக்கு தேவையான ஒட்சிசன் தேவையிளை இரண்டு உள்நாட்டு உற்பத்தியாளர்கள், இதுவரை காலமும் பூர்த்தி செய்தனர் எனவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.