கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், தற்போது வீடுகளில் உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார்.
கொரோனா தொற்று உறுதியானவர்களை வீடுகளிலேயே தங்க வைத்து சிகிச்சையளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும் சிறந்த காற்றோட்டத்தை பெறுவதினால் விரைவில் குணமடைவார்கள் வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார்.
சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்நிலைமைகளுக்கு மேலதிகமாக கடுமையான நோய் நிலைமை காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையைப் பெறப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.