லடாக், கடந்த இரண்டு வருடங்களில் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஏனெனில் அரசாங்கம் அதன் குடிமக்களுக்கு பசுமையான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பல வளர்ச்சித் திட்டங்களை செயற்படுத்தியுள்ளது.
இமயமலை பிராந்தியத்தின் கடினமான நிலப்பரப்புகளில் புதிய சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகள் செதுக்கப்பட்டு பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட லடாக் எல்லைப் பகுதியை மேம்படுத்துவதில் புது டெல்லி கவனம் செலுத்துவதாக சவுதி அரசிதழ் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியின் வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக லடாக் மக்கள் 1949 இல் யூனியன் பிரதேசம் ஊடான வழியை நாடினர்.
அதன்பின்னர் ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் 370 வது பிரிவை இரத்து செய்து மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அரசாங்கம் அறிவித்தது.
இந்நிலையில் தற்போது சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களின் வேலை வேகம் பெற்றுள்ளது.
தொலைதூர எல்லை கிராமங்கள் கூட இப்போது தொலைபேசி நெட்வொர்க் மற்றும் இண்டர்நெட் மூலம் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் மூலம் சூரிய மின்சக்தி உற்பத்தி அலகுகளால் இணைக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசிதழ் தெரிவித்துள்ளது.
யூ.டி நிர்வாகம் பிராந்தியம் மற்றும் அதன் மக்கள்தொகையின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான ஒரு இலட்சிய திட்டத்தை வகுத்துள்ளது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில், பல வளர்ச்சித் திட்டங்கள் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை லடாக்கை தேசிய கட்டத்துடன் இணைக்க உதவியது.
மேலும் பெப்ரவரி 2019 இல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டா ஹைட்ரோஎலக்ட்ரிக் திட்டத்தை தொடங்கி வைத்தார் மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் போதுமான மின்சாரத்தை வழங்குவதற்காக ஒட்டுமொத்த மின்மயமாக்கலுக்காக 220 KV டிரான்ஸ் மிஷனை அர்ப்பணித்தார்.
2020-21 நிதியாண்டில் லடாக்கின் வளர்ச்சிக்கு ஏறத்தாழ 60 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 214.4 பில்லியன் ரூபாய் செலவில் ஒன்பது திட்டங்கள் லடாக் யூ.டிக்கு மாற்றப்பட்டன.
அத்துடன் நுப்ராவில், ரோங்டோவில் ஷயோக் ஆற்றின் மீது 82 மீட்டர் இடைவெளி கொண்ட பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. லடாக் நிர்வாகம் புதிய விதிகளை வகுத்துள்ளது. இதன் கீழ் உள்ளூர் மக்களுக்கான வேலைகள், பிரத்தியேகமாக ஒதுக்கப்படும் என்று சவுதி அரசிதழ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஒரு பெரிய திட்டத்தின் முதல் பாகமாக 7,500 மெகாவாட் தொகுப்புடன் லடாக்கில் உள்ள மெகா சோலார் திட்டத்தை இணைக்கும் 23,000 மெகாவாட் கட்டத்தை அளவிடுவதற்கான திட்டத்தை வகுத்துள்ளது.
10,000 க்கும் மேற்பட்ட லடாகி மாணவர்களுக்கு உதவும் புத்த மத ஆய்வு மையத்துடன் லடாக்கில் முதல் மத்திய பல்கலைக்கழகத்திற்கான திட்டத்தை பிரதமர் மோடி, தொடங்கி வைத்துள்ளார்.
இதேவேளை இப்பகுதியின் முக்கிய வளர்ச்சித் தளங்களில் ஒன்றான கலாச்சார சுற்றுலா மடாலயங்களும் புதிய ஊக்கத்தை பெற்றுள்ளன.
கடந்ம 2019 ஆம் ஆண்டில் லடாக்கில் ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 279,937 ஆக இருந்தது. ஜூன் 2020 வரை, லடாக்கில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 6,079 ஆகும். அதில் 5,019 உள்நாட்டு சுற்றுலா பயணிகள். மீதமுள்ள 1,060 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்று அரசின் அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுற்றுலாப் பயணிகளுக்காக இன்னும் சில எல்லைக் கிராமங்களைத் திறப்பதாகவும், மூலோபாய சாலைகளை அமைத்தல், எல்லைக் கிராமங்களை மேம்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளதாக அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.
இமயமலை பிராந்தியத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்து உள்ளூர் மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில், புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க செப்டம்பர் 23, 2019 அன்று இந்திய மத்திய அரசு ஒப்புதல் அளித்தமை குறிப்பிடத்தக்கது.