திபெத்தில் 8 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இந்த வருடம் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் தன்னாட்சிப் பகுதியான நியாங்ட்ரி நகரில் அமைக்கப்பட்ட புதிய இராணுவக் கல்வி முகாம்களுக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.
சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மீது நல்லுறவினை வளர்ப்பதற்காக இந்த மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று திபெத்தை மையமாகக் கொண்ட ஊடக அமைப்பு ஃபாயுல் தெரிவித்துள்ளது.
இத்தகைய முகாம்களின் நோக்கம் ‘தேசபக்தி உணர்வை அதிகரிப்பது, தேசத்தை பாதுகாப்பது, உடல் வலிமை அதிகரித்தல், மன வலிமை ஆகியவற்றை வளர்ப்பது மற்றும் ஒற்றுமையின் உணர்வை அதிகரிப்பது என்று கம்யூனிஸ்ட் ஆட்சி கூறுகிறது என சீன அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோடை விடுமுறையில் பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஸ்னோ ஹாக் இராணுவ கோடைக்கால முகாம் மற்றும் திபெத் ரோங் ஹீ இராணுவ பயிற்சி முகாமில் இராணுவ பயிற்சிகள் மற்றும் ஒழுக்கம் கற்பிக்கப்படுவதாக ஃபாயுல் தெரிவித்துள்ளது.
இந்த முகாம்கள் திபெத்திய விவசாயிகள், நாடோடிகள் மற்றும் முன்னாள் அரசியல் கைதிகளை மையமாகக் கொண்ட நைங்கிரியில் உள்ள தொழில் திறன் பயிற்சி நிறுவனங்கள் போன்றது எனவும் கூறப்படுகின்றது.
திபெத் அறிக்கை ஒன்றை மேற்கோள் ஃபாயுல் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2008 திபெத்திய எழுச்சியிலிருந்து, சீனாவின் சிசிபி ‘கண்காணிப்பை அதிகரிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இணைப்புகள், பரம்பரைகள், வாழ்க்கை முறை மற்றும் விசுவாசங்களை உடைக்க அதன் ஒருங்கிணைந்த இனக் கொள்கைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியை விரும்பும் விதத்தில் மக்களின் எண்ணங்களை வடிவமைக்க சீனா நீண்ட காலமாக இத்தகைய நடைமுறைகளைச் செய்து வருகிறது.
சின்ஜியாங்கில், பெய்ஜிங்கிற்கு ஆதரவான முறையில் குடிமக்களை வடிவமைப்பதற்காக பல முகாம்கள் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இருப்பினும் பல ஊடக அறிக்கைகள், சின்ஜியாங் முகாம்களை பயிற்சி முகாம்கள் என சீனா கூறுவது போல் கல்வி மையங்கள் அல்ல என்று கூறியுள்ளன.
சின்ஜியாங்கில் உள்ள மறு கல்வி முகாம்களில் கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட விரிவான மனித உரிமை மீறல்கள் இருப்பதாக அறிக்கைகள் குற்றம் சாட்டியுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு,சீனா தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும் முகாம்களை ஒழிக்கவும் கருத்தடை செய்வதை நிறுத்தவும் அனைத்து சித்திரவதைகளை நிறுத்தவும் மற்றும் சின்கியாங்கில் உய்குர் மற்றும் பிற இன மற்றும் மத சிறுபான்மை குழுக்களின் உறுப்பினர்களைத் துன்புறுத்துவதை நிறுத்தவும் அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.