ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது அங்குள்ள கள நிலைவரம் மற்றும் அதனால் பிராந்தியம் மற்றும் உலகம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தலிபான்களால் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, அங்கே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தியா -ஜெர்மனி தந்திரோபாய கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.