கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகத்தின் பதில் தலைவர்- சைஃப் அலனோபியுடன் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறித்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது நீண்ட கால கடன் வசதியின் கீழ் அவற்றினை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.