ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காபூலில் இருந்து 83 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்கள் சாவ்லா என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்களுக்கு கொரோனா பாரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போதே 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த 10 பேரும் இந்தோ திபெத்திய பொலிஸ் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.