இரு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மே மற்றும் ஜூலை 2021 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தரவை உள்ளடக்கியே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பைசர் அல்லது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டு அளவுகளைப் பெற்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களிடையே குறித்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில் பைசர் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்களின் பாதுகாப்பு ஒரு மாதத்தில் 88% லிருந்து ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74% ஆகக் குறைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை அஸ்ட்ராசெனெகாவைப் பொறுத்தவரை, நான்கு முதல் ஐந்து மாதங்களில் 77% இல் இருந்து 67% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலவேளை மீண்டும் தொற்று ஏற்படலாம் என்றாலும் கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாப்பதில் தடுப்பூசிகள் இன்னும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.