பாட்- ஃபீடர் கால்வாயின் தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் குவெட்டா- சுக்கூர் நெடுஞ்சாலையை மறித்து, பல மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை கடந்த 20ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர்
இவ்வாறு சுக்கூர் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டமையினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நீர்ப்பாசனத்துறை அலுவலகத்திற்கு வெளியே உள்ளிருப்பு போராட்டம் நடத்தி அதன் அதிகாரிகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் மிர் சாதிக் உம்ரானி, “பாட்-ஃபீடர் கால்வாயின் தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சினையை தீர்க்கவில்லை என்று அரசாங்கத்தை விமர்சித்தார்.
இது நசிராபாத் கோட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையை மோசமாக பாதிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கால்வாயில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நசிராபாத் கோட்டத்தில் நெற்பயிர் சேதமடையலாம் என மிர் சாதிக் உம்ரானி எச்சரிக்கை விடுத்தார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஒரு நீர்வழிப்பாதை மறுபக்கம் திரும்பியுள்ளது. இதனால் பாட்-ஃபீடர் கால்வாயின் கட்டளை பகுதி அதன் வால் முனை பகுதிகளுக்கு நீர் விநியோகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை பாட்-ஃபீடர் கால்வாயின் கட்டுப்பாட்டை மூன்று மாதங்களுக்கு எல்லைப் படைகளுக்கு வழங்க பாபு அமின் உம்ரானி, நிஜாமுதீன் மற்றும் வைத்தியர் ஷாநவாஸ் மெங்கல் ஆகியோர் இதன்போது அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.