தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களுக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமால் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு சந்திமால் இலங்கை அணிக்காக விளையாடவில்லை.
இதேபோல, கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த பிறகு தனிமைப்படுத்தப்பட்ட குசல் பெரேராவும் அணியில் இணைந்துள்ளார்.
லஹிரு மதுஷங்க, மகேஷ் தீக்ஷன மற்றும் புலின தரங்க ஆகியோர் இலங்கை அணியில் புதுமுக வீரர்களாக களமிறங்கவுள்ளனர்.
தசுன் ஷனகா தலைமையிலான அணியில், தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, பத்தும் நிசங்க, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், மினோத் பானுக, ரமேஷ் மெண்டிஸ், சாமிக கருணாரத்ன, நுவான் பிரதீப், பினுர பெர்னான்டோ, துஷ்மந்த சமீர, அகில தனஞ்சய, பிரவீன் ஜெயவிக்ரம, லஹிரு குமார, லஹிரு மதுஷங்க, புலின தரங்க, மகீஷ் தீக்ஷன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்கா மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. செப்டம்பர் 2ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை அனைத்து போட்டிகளும் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ரி-20 தொடர்களில் இரு அணிகளும் விளையாடவுள்ளன.
ரி-20 உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் இரு அணிகளுக்கும் இது இறுதி சர்வதேச போட்டித் தொடராகும்.